ETV Bharat / city

தங்கச் சங்கிலி! - ஸ்டாலினை நெகிழச் செய்த நிதி!

கரோனா பேரிடர் நிதியாக தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொடுத்த ஏழை பட்டதாரிப் பெண்ணின் கொடை தன்னை மிகவும் நெகிழச் செய்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M K Stalin tweet, salem sowmya letter to cm, முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட், ஸ்டாலின் ட்வீட், முதல்வர் ஸ்டாலின், மு க ஸ்டாலின்
salem sowmya letter to cm mk stalin
author img

By

Published : Jun 13, 2021, 7:12 PM IST

Updated : Jun 13, 2021, 10:04 PM IST

சென்னை: மேட்டூர் அணையைத் திறந்து வைப்பதற்காக, சேலத்துக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர்.

அவற்றில் பொறியியல் பட்டதாரிப் பெண் ஒருவரின் மனுவில், தனது குடும்ப வறுமை நிலையை எடுத்துக் கூறி தனது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தார். மனுவுடன் தன்னிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும், கரோனா நிதியாக அவர் வழங்கியிருந்தார்.

இதுகுறித்து முதலமைச்சரின் ட்விட்டர் பதிவில், "மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

  • மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.

    பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.

    பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். pic.twitter.com/Ioqt6dq5YU

    — M.K.Stalin (@mkstalin) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பேரிடர் காலத்தில் கொடை உள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரிடத்தில் கொடுத்த மனுவில், " நான் கணினி பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். எனது தந்தை ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர். திருமணம் முடிந்த இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனார். அவரின் மருத்துவ செலவிற்கும், சகோதரிகளின் திருமணத்திற்கும் என, தந்தை சேர்த்து வைத்திருந்த அனைத்து பணமும் செலவிடப்பட்டது.

இச்சூழலில், நானும் வேலையில்லாமல் இருக்கிறேன். வீட்டு வாடகைப் போக வெறும் ரூ.4 ஆயிரம் மட்டும் வைத்து குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை உள்ளது.

அதனால், என் தாய் இடத்தில் இருந்து எனக்கு ஒரு வேலைவாய்ப்பை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்" என, அந்தக் கடிதத்தில் செளமியா தான் படும் துயரை விவரித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தான் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை கரோனா நிவாரண நிதிக்காக கடிதத்துடன் வைத்து செளமியா அனுப்பியுள்ளார்.

அன்றாட பிழைப்பிற்கே வழியில்லாத சூழலிலும், பட்டதாரி பெண் ஒருவர் கரோனா நிதிக்காக 2 பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 13, 2021, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.