ETV Bharat / city

விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் சகாயம் ஐஏஎஸ்! - சகாயம் ஐஏஎஸின் ஆதரவாளர்கள் கடிதம்

விருப்ப ஓய்வு பெற்றுள்ள சகாயம் ஐஏஎஸ்-இன் அரசியல் அறிவிப்பு கூட்டம் குறித்து அவரது ஆதரவாளர்கள் அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

sagayam political announcement meeting
sagayam political announcement meeting
author img

By

Published : Feb 19, 2021, 7:32 AM IST

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "சகாயம் ஐஏஎஸ், அரசுப்பணியில் இருக்கும்போது “லஞ்சம் தவிர்த்து...! நெஞ்சம் நிமிர்த்து...!!” என்கின்ற முழக்கத்தை தாம் பணியாற்றிய இடங்களில் எல்லாம் எழுதி வைத்து, ஊழலை ஒழிக்க அர்ப்பணிப்போடு பணியாற்றினார்.

அவரின் அளப்பறிய நேர்மையாலும் துணிச்சலான செயல்களாலும் ஈர்க்கப்பட்ட இளைஞர்களும் பொதுமக்களும் தமிழ்நாட்டின் சமூக அரசியல் மாற்றத்திற்காக அவரை தலைமையேற்க வேண்டி காத்துக்கிடக்கிறார்கள்.

இந்நிலையில் உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21ஆம் தேதி, மாலை 4 மணியளவில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஜே.பி. பாரடைஸ் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சகாயம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுகிறார்.

இந்த மாபெரும் நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், ஆர்வலர்கள், சமூக அமைப்பினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.