சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி நகர் சென்ட்ரல் அவென்யூ 3 ஆவது மெயின் ரோட்டில், தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை அவர்கள் சோதனையிட்டனர். அதில் 7 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
பின்னர் பணத்திற்கான தகுந்த ஆவணங்கள் வியாபாரியிடம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் அப்பணத்தை பறிமுதல் செய்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (45) என்பதும், மிளகாய் பொடி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்த 7 லட்ச ரூபாய் பணத்தை பெரம்பூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தலைப் புறக்கணிப்பதாக தூத்துக்குடி விவசாயிகள் அறிவிப்பு