ETV Bharat / city

சென்னையில் சிறப்பு வாகன தணிக்கையில் ரூ.48,300 வசூல்! - சென்னை போக்குவரத்து காவல்

உணவு விநியோக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விதி மீறல்களைக் குறைக்க போக்குவரத்து காவல்துறை மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில், உணவு விநியோக்கும் நிறுவனங்களான ஜுமோடா 114, ஸ்விக்கி 160, டன்சோ 63, பிற நிறுவனங்கள் 28 என 365 வழக்குகள் பதியப்பட்டு ரூ.48,300 அபராதம் பெறப்பட்டுள்ளன.

சென்னை போக்குவரத்து காவல்
சென்னை போக்குவரத்து காவல்
author img

By

Published : Apr 17, 2022, 1:53 PM IST

சென்னை: சென்னையில், 30.03.2022 அன்று சிறப்பு வாகன தணிக்கை சென்னை பெருநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிறப்பு தணிக்கையின் போது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 1,35,400 அபராதம் விதிக்கப்பட்டது.

07.04.2022 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் போது நிறுவனம் வாரியாக விவரங்கள் எடுக்கப்பட்டு மீறுபவர்களின் விவரங்களுடன் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் நிறுவனங்களின் பொறுப்பாளருக்கு மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் தரப்பட்டது.

நேற்று முன்தினம் (ஏப்.15) உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது இதேபோன்ற சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 365 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு விநியோக்கும் நிறுவனங்கள் வாரியாக விதிமீறல்கள் ஜுமோடா 114, ஸ்விக்கி 160, டன்சோ 63, பிற நிறுவனங்கள் 28 என 365 வழக்குகள் பதியப்பட்டு 48,300 அபராதம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மது போதையில் வாகனங்களை ஓட்டினால் கைது - காவல்துறை கடும் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.