சென்னை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசால், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களைத் தயாரித்தல், சேமித்துவைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தும் நெகிழித் தாள் / உறை, உணவு அருந்தும் மேசையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், தெர்மாகோல் தட்டுகள் போன்ற 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
அரசின் அறிவுறுத்தலை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருள்களை மாநகராட்சி பறிமுதல்செய்து அபராதம் விதித்துவருகிறது.
அதனடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் மட்டும் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 5,759 இடங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பயன்பாடு கண்டறியப்பட்டு, நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று ஒரே நாளில் 20,069 பேருக்கு பூஸ்டர் டோஸ் - சென்னை மாநகராட்சி