ETV Bharat / city

புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ. 2,500 கோடி ஒதுக்கீடு - தா.மோ. அன்பரசன் - புதிய வீடுகள் கட்ட 2ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

இரண்டு ஆண்டுகளுக்குள் ஏழாயிரத்து 500 வீடுகளைக் கட்டுவதற்கு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன்

author img

By

Published : Dec 27, 2021, 4:20 PM IST

சென்னை: திருவொற்றியூரிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த கட்டடத்தை தா.மோ. அன்பரசன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அன்பரசன், “திருவொற்றியூர் கிராமத் தெருவிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 24 வீடுகள் இடிந்துள்ளன. இந்தக் கட்டடம் 1993ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நீண்ட நாள் பயன்பாடு, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கட்டடம் சிதிலமடைந்து இடிந்துள்ளது.

சென்னையில் 23 ஆயிரம் வீடுகள் பழமையான வீடுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. வெளியூரில் பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு மக்களைக் குடியமர்த்த முடியாத நிலை உள்ளது. சென்னையில் வாழ்வதற்குத் தகுதியில்லை எனக் கண்டறியப்பட்ட இந்த 23 ஆயிரம் வீடுகளும் வருகிற இரண்டு ஆண்டிற்குள் புது வீடுகளாகக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

புதிய வீடுகள் கட்டும் பணி

இதற்காக ஏழாயிரத்து 500 வீடுகளைக் கட்டுவதற்கு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதியில்லாத வீடுகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணிகளை அனைத்துத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்களும் செய்துவருகின்றனர்.

தற்போது இடிந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நிவாரணமாக முதலமைச்சர் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஓரிரு நாளில் மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

பழைய கட்டடங்கள் அகற்றப்படும்

தொழில்நுட்பக் குழு இங்கு வரவழைக்கப்பட்டு இங்குள்ள அனைத்துக் கட்டடங்களும் ஆராயப்பட்டு வாழ்வதற்கு ஏற்ற கட்டடமா என்பதை அறிந்து, தகுதியில்லாத வீடுகளில் இருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும். தற்போது எட்டாயிரம் வீடுகளுக்குப் புனரமைப்புச் செலவிற்காக ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அனைத்துப் பகுதியிலுள்ள வீடுகளுக்குப் புனரமைப்புச் செய்வதற்காக 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் சென்னையிலுள்ள பழைய கட்டடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் பொலிவுடன் பொதுமக்களுக்கு முதலமைச்சர் வழங்குவார். அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ராஜேந்திர பாலாஜி விவகாரம்

தற்போது இடிந்த வீடுகளில் இருந்த மக்கள் மிகுந்த பதற்றத்துடன் உள்ளனர். அவர்களின் பதற்றத்தைப் போக்க வேண்டிய வேலை எங்களுக்கு உள்ளது. ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கு மாற்று இடம் கட்டாயமாக வழங்கப்படும்.

ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் நாங்கள் அவரை பிளாக்லிஸ்ட் (கறுப்புப் பட்டியல்) செய்து அவருக்கு அறிக்கை அனுப்பினோம். ஆனால், அவர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று இடைக்காலத் தடை வாங்கியுள்ளார். அதனைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் பணியைச் செய்துவருகிறோம்.

செய்தியாளரைச் சந்தித்த தா.மோ. அன்பரசன்

கட்டடத்தன்மை குறித்து புகார் அளித்து ஏதேனும் அலுவலர்கள் முதலமைச்சரின் தனிப்பட்ட புகார் மையத்தைத் தொடர்புகொள்ளுங்கள் எனக் கூறினால் அந்த அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த ஆய்வின்போது திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கோவையில் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படும் - செந்தில்பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.