சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சவுதி அரேபியாவிலிருந்து சிறப்பு விமானம் வந்தது. அந்த விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி கொண்டு வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால், சுங்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் உடமைகள் வந்திருந்தன. அவற்றை சுங்க இலாகா அலுவலர்கள் பிரித்து பார்த்தபோது பேரிச்சம்பழ பெட்டிகள் இருந்தன.
அதில் இருந்த பேரிச்சம்பழங்களுக்கு நடுவே 300 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ. 15 லட்சத்து 26 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : பல்வேறு பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
!