2018ஆம் வருடம் அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பினு, நிபந்தனை பிணையில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார். தலைமறைவான ரவுடி பினு திருவல்லிக்கேணி காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்த நிலையில், பாதுகாப்பு கருதி பினுவை சேலம் மத்தியச் சிறைக்கு மாற்றியுள்ளனர்.
படமெடுத்தா பயந்துருவோமா... பாம்பின் தலையை அசால்ட்டாக பிடிக்கும் நபர்!
கேரளாவிலிருந்து பிழைப்பிற்காகச் சென்னை வந்த பினு, 1990 சமயத்தில் கராத்தே பயிற்றுநராக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் அவ்வப்போது வழக்கில் கைதான நிலையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடன் கை கோர்த்து ரவுடியாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறை சென்று வந்த பினு மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.