சென்னை அமைந்தகரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல், டீக்கடை, தள்ளுவண்டிக் கடைகளில் காவல்துறை எனக் கூறி இருவர் பணம் பறிப்பதாக அமைந்தகரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பணம் பறித்த ரவுடிகளைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ் (எ) கல்லறை சதீஷ் (29), சூளைமேட்டைச் சேர்ந்த மதிவாணன் (33) என்பதும் தெரியவந்தது. இதில் சதீஷ் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும், மதிவாணன் மீது அடிதடி வழக்கு நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்தது.