சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் ரவி அனைத்து காவலர்களுக்கும் பொங்கல் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "பொங்கல் திருநாளில் பொதுமக்களின் நலனுக்காக நம் நலனையும் துச்சமென மதித்துச் செயல்பட வேண்டும் எனக் காவலர்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும். தாம்பரம் காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பான, உறுதியான, விரைவான காவல் பணியை மக்களுக்கு அர்ப்பணிக்கத்தான்.
- மக்களுக்கு ஏற்படும் இன்னல்களான போக்குவரத்து நெரிசல்
- அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டுதல்
- அதிக ஓசை எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்தி சாலையில் செல்லும்போது பொதுமக்களின் காதுகளுக்கு கேடு விளைத்தல்
- பாதசாரிகள் செல்ல முடியாமல் வாகனங்கள் ஓட்டுதல்
- திருட்டு - ரவுடிகளின் அட்டகாசம்
- சங்கிலிப் பறிப்பு
- நில அபகரிப்பு
- இரட்டை ஆவணங்கள் - போலி ஆவணங்கள் தயாரிப்பு
- பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்
- பாலியல் தொல்லை
- இணையதளத்தின் மூலமாக நடத்தப்படும் சைபர் குற்றங்கள்
- குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுதல்
- சாலை ஓரங்களிலும் வீதிகளிலும் கும்பலாக அமர்ந்துகொண்டு அருவருக்கத்தக்க வகையில் சாலையில் செல்பவர்களை கேலி செய்தல்
- மக்களுக்கு இன்னல் தரும் செயல்களைச் செய்தல்
ரவுடிகள் ஒழிக்கப்பட வேண்டும்
இவை அனைத்தும் முற்றிலும் ஒழிக்க முறையோடுச் செயல்படுவோம். ரவுடிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும், நில அபகரிப்புகள் எத்தனை பின்புலம் கொண்டிருந்தாலும் அவர்கள் அடியோடு வேறுரக்கப்பட வேண்டும், கிராமங்கள் மகிழ்ச்சிப் பூங்காவாக மாற வேண்டும்.
நகரங்கள் சொர்க்க பூமியாக மாற வேண்டும், மக்கள் அனைவரும் அமைதியுடன் இன்பத்துடன் வாழ்வதற்கு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் சமமானவர்களே என்ற எண்ணத்துடன் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைவா... ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ரஜினி