தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (37). இவர் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள மதுபானக் கடை அருகில் நடந்து சென்றார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி உள்ளனர். இதனால் ரமேஷ்குமார் அந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேரும் ரமேஷ்குமார் இருசக்கர வாகனத்தில் குண்டுகட்டாக தூக்கி கொண்டு மார்க்கெட் பகுதி உள்ளே அழைத்துச்சென்று சரமாரியாக அடித்து அவர் காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து ரமேஷ்குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து திருமங்கலம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம்(26) என்பவர் வீட்டில் பதுங்கி இருந்த தகவலறிந்து காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் அருணாச்சலம், ராஜா மற்றும் பவர் சூர்யா ஆகியோர் கத்தியை காட்டி வழிமுறையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அருணாசலம் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!- 28 லட்சம் பறிமுதல்