ETV Bharat / city

துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - சென்னையில் துணிகர சம்பவம்! - பணம் கொள்ளை முயற்சி சென்னை

சென்னை: கைத்துப்பாக்கி, இரும்பு ராடுடன், முகமூடி அணிந்துவந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், 20 லட்சம் ரூபாய் பணப்பையைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Robbery atttempt in Chennai
author img

By

Published : Oct 2, 2019, 12:42 PM IST

அட்டிகா கோல்ட் நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை அலுவலராக பணிபுரியும் கிரீஷ் என்பவர், நேற்றிரவு 20 லட்சம் ரூபாய் பணத்தோடு பெங்களூரிலிருந்து பேருந்து மூலம் சென்னை வந்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கி தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் இரும்பு ராடுடன் முகமூடி அணிந்து, கிரிஷ் கையிலிருந்த 20 லட்சம் ரூபாய் பணப்பையைப் பறிக்க முயன்றுள்ளனர்.

Robbery attempt recorded in CCTV

உடனே சுதாரித்த கிரீஷ் அருகிலிருந்த கடைக்குள் ஓடியும், முகமூடிக் கொள்ளையர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது, கடையின் பாதுகாவலர் சையத் சுல்தான் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதையும், ’திருடன்’ என்று கூச்சலிட்டதையும் தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தொடர்ந்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் கையில் இரும்பு ராடு, கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணையை துரிதப்பருத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:

கையூட்டு பெற்ற டிஎஸ்பி, எஸ்ஐ-க்கு சிறைத் தண்டனை விதித்த திருச்சி நீதிமன்றம்!

Intro:Body:அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு பணப்பரிவர்த்தனை அதிகாரியாக இருப்பவர் கிரிஷ். இன்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலம் ரூ. 20 லட்சம் பணம் பையோடு கோயம்பேடு பஸ் நிலைய இறங்கினார்.

சென்னையில் பணிபுரியும் காவலாளி சந்திரகுமாருடன் இரண்டு சக்கர வாகனம் மூலம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை பாரதி நகர் 2-வது தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த எங்களுக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் முகமூடி அணிந்து இரும்பு ராடுடன் வந்து கிரிஷ் கையிலிருந்த ரூ. 20 லட்சம் பணப்பையை பறிக்க முயன்றனர்.

அப்போது தப்பி அங்கிருந்த கடைக்குள் ஒன்றிற்குள் கிரீஷ் ஓடினார். ஆனாலும் முகமூடி கொள்ளையர்கள் துரத்தி வந்தனர்ர். கடையின் வேலை பார்க்கும் பாதுகாவலர் சையத் சுல்தான் என்பவர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கி காட்டி திருடன் திருடன் என கூச்சலிட்ட போது கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து பாண்டிபஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் கையில் இரும்பு ராடு, கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அது ஒரிஜினலா? பொம்மை துப்பாக்கியா என்பது தெரியவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.