சென்னை: கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உள்புறத் தார்ச் சாலைகள், உள்புற கான்கிரீட் சாலைகள், பேருந்து சாலைகள், நடைபாதைகள் உள்பட ஆயிரத்து 656 சாலைகள் மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுவரை மொத்தமாக 803 சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் 853 சாலைகளின் மறுசீரமைப்புப் பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழைக்குப் பின்னர் போடப்பட்ட சாலைகள் அனைத்தும் சரியான முறையில் போடப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாநகராட்சி உயர் அலுவலர்களும், தமிழ்நாடு முதலமைச்சரும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்