சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலக மண்டலத்தில், அதிமுகவின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் ராஜேஷ், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவருடன் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், “ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை மக்களிடம் இருபது ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்று விட்டனர். ஆனால் இம்முறை மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.
இத்தொகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் அரசு அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகளை பெற்றுக் கொடுப்பேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: என்னை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்! - டிடிவி.தினகரன்