ETV Bharat / city

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் திருப்புதல் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை தகவல் - மீண்டும் திருப்புதல் தேர்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை தகவல்
பள்ளிக் கல்வித்துறை தகவல்
author img

By

Published : Mar 4, 2022, 10:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

உலகையே உலுக்கிய கரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் தற்போது பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் யாரும் ஆண்டுத்தேர்வை நேரடியாக எழுதாமல் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, உயர் வகுப்புக்கு வந்து சேர்ந்துள்ளனர். இதனால், அவர்களிடம் பொதுத்தேர்வை எதிர்கொள்வதில் இருக்கும் அச்சத்தை களையும் வகையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்தலின் பொருட்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

மீண்டும் திருப்புதல் தேர்வு

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற திருப்புதல் தேர்விலுக்குண்டான வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில், மீண்டும் தேர்வு நடத்தப்படும் பொழுது பாதுகாப்பாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம், திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும், இதற்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளன.

11ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை
ஏப்.5ஆம் தேதிமொழித் தாள்
ஏப்.6ஆம் தேதிஆங்கிலம்
ஏப்.7ஆம் தேதிதொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கைகள், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர்வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
ஏப்.8ஆம் தேதிவேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
ஏப்.11ஆம் தேதிகணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், வணிகவியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், ஆடை வடிவமைப்பு மற்றும் துணி நூல், உணவு சேவைகள் மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்
ஏப்.12ஆம் தேதிஉயிரியல், தாவரவியல், வரலாறு, அடிப்படை கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
ஏப்.13ஆம் தேதிஇயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.