சென்னை: மணப்பாக்கத்தில் உள்ள ரிவர் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்ரம் ஜாங்கிட். ஓய்வுபெற்ற டிஜிபியான ஜாங்கிட்இன் மகன் ஆவார்.
இவர் மணப்பாக்கத்தில் விளையாட்டு மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இச்சூழலில் விக்ரம் ஜாங்கிட் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், 'தனது விளையாட்டு மையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களான சுல்தான், சந்தோஷ் ஆகிய இருவர், எனது அலுவலகத்தில் அனுமதியின்றி நுழைந்து, எனது கணினி மூலம் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாகவும், அலுவலகத்தில் வைத்திருந்த 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளதாகவும் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.