கரோனா தொற்றால் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டுவருகிறது. முன்பு, வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் தெருவைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவிக்கு.
இது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டை மட்டும் தனிமைப்படுத்திவருகின்றனர். மேலும் ஒரு தெருவில் மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று இருந்தால் மட்டும், அந்தத் தெருவைத் தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநகராட்சி அறிவித்துவருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த மூன்று நாள்களாக 196 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன, தற்போது அந்த எண்ணிக்கை 188ஆக குறைந்துள்ளது.
இதன் மண்டல வாரியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
தண்டையார்பேட்டை - 1
திரு.வி.க நகர் - 9
அம்பத்தூர் - 8
அண்ணா நகர் - 27
கோடம்பாக்கம் - 124
வளசரவாக்கம் - 5
ஆலந்தூர் - 5
அடையார் - 9