ETV Bharat / city

ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவதை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவு! - Madras high court order news

சென்னை: ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Restrain construction near erode perumpallam odai, notice served MHC

author img

By

Published : Feb 26, 2021, 3:31 PM IST

இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ள ஓடை 23 கிலோமீட்டர் தூரம் ஓடுவதாகவும், விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாகவும் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓடையின் அருகில் எவ்வித கட்டுமானங்களும் இருக்க கூடாது என்பதை உறுதி செய்யவும், ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது என அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளதால், அந்தக் கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டுமென்றும், ஓடையின் போக்கை மாற்றக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, குரூப் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க...2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.