ETV Bharat / city

எந்தெந்தத் தேதிகளில் எந்தெந்தத் துறைகள்?: மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை

author img

By

Published : Mar 2, 2020, 12:14 PM IST

சென்னை: அவைத்தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்தத் தேதியில் எந்தெந்தத் துறைகள் மீது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

'எந்த தேதி? எந்த துறை?' - மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை

சென்னை தலைமைச் செயலகத்தில் அவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டனர்.

மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் அபுபக்கர் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த கால அட்டவணை

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவைத்தலைவர் தனபால், "மார்ச் மாதம் 9ஆம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு தீர்மானங்களுடன் சட்டப்பேரவைத் தொடங்கும். இதில் மறைந்த திமுக உறுப்பினர்கள் கே.பி.பி. சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மொத்தம் 23 நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி நிறைவடையும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன், மொத்தம் 23 நாள்கள் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டுத்தொடரில் எந்தெந்தத் தேதியில் எந்தத்தெந்தத் துறைகள் மீது விவாதம் நடத்துவது என்பது குறித்த கால அட்டவணையையும் வெளியிட்டார்.

கால அட்டவணையின்படி, மார்ச் 12ஆம் தேதி பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, மார்ச் 16ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், மார்ச் 19ஆம் தேதி கூட்டுறவுத் துறை, மார்ச் 20ஆம் தேதி நீதி நிர்வாகம், சட்டத் துறை ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

இதையும் படிங்க: உலக பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் கொரோனா: பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.