சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில்,
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கவில்லை என்று கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில், ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கவில்லை
வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றப் பணியிடங்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்கள், எவரும் விண்ணப்பிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...