சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நிவாரண நிதிக்கு அனைத்து தரப்பினரும், தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு பெரு வணிக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கின.
இந்நிலையில், இன்று (ஆக.21) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து கரோனா நிவாரண நிதியாக ரூ. 5 லட்சத்தை வழங்கினர்.
முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்த சங்கத்தினர்
பின்னர், இதுகுறித்து நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, " நாமக்கல் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கல்விக்காக சிறந்த பணியாற்றி மறைந்த காளியண்ணன் அய்யா பெயரை, நாமக்கலில் அமைக்கப்பட்டுவருகின்ற மருத்துவ கல்லூரிக்கு வைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து அமைச்சரவையில் முடிவு செய்து தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் - மம்தா அழைப்பு