ETV Bharat / city

நளினி மனு மீதான தீர்ப்பில் அரசுதரப்பு வாதத்தை திருத்திப்பதிவிட உயர் நீதிமன்றம் உத்தரவு! - தலைமை வழக்கறிஞர் கூறாத வாதங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை

ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியது சரி என அரசு வாதிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

mhc
mhc
author img

By

Published : Jun 29, 2022, 4:57 PM IST

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இதையடுத்து, ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து ஜூன் 17ஆம் தேதி தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்காத கருத்துகள் மட்டும் வாதங்களில் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்று உள்துறை இணைச்செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சரி என்று தலைமை வழக்கறிஞர் தன் வாதத்தில் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. ஆனால், அவர் அப்படி எதுவும் கூறவில்லை. மேலும், அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து, ஆளுநரோ? அல்லது குடியரசுத் தலைவரோ? கையெழுத்திடவில்லை என்றால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தலைமை வழக்கறிஞர் கூறியதாக தீர்ப்பில் உள்ளது. இந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அதனால் நளினி மனு மீதான தீர்ப்பை திருத்த வேண்டும், தலைமை வழக்கறிஞர் கூறாத வாதங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட கருத்துகளை நீக்கி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: விமான பயணிக்கு திடீர் நெஞ்சு வலி - உயிரிழப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.