சென்னை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்.1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை அறிதல், வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், பழுது பார்ப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தமிழ்நாடு அரசானது பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களின் கருத்தை கோரியிருக்கிறது.
இதுதொடர்பாக,ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இம்மாதம் கலந்துரையாடுகிறார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றன. இதனிடையே, சீனாவில் கடந்த ஒருவாரமாக கரோனா தொற்றுபரவல் அதிகரித்துவருவதால், பல்வேறு மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மழலையர் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுக்கவில்லை'