சென்னை: ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சிவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, எஸ்.சௌந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சிவகுமாரின் மனைவி திருமண உறவில் இருக்கும் போதே அவர் கட்டிய தாலியை கழட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து பதிலளித்த எதிர் மனுதாரர், இந்து திருமணச் சட்டத்தின் 7வது பிரிவைக் குறிப்பிட்டு, தாலி கட்டுவது அவசியமில்லை என்றும், அது உண்மை என்று கருதி அதை அகற்றுவது, திருமண பந்தத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால், இந்தியாவில் தாலி ஒரு முக்கியமான திருமணச் சடங்குகளில் இன்றியமையாத சடங்கு என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் எதிர் மனுதாரரே அவர் தாலியை கழட்டியதையும், வங்கியில் வைத்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு இந்து திருமணமான பெண் தாலியை கழட்ட மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கணவனின் வாழ்நாளில் "ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி என்பது திருமண வாழ்க்கையின் தொடர்ச்சியை குறிக்கும் புனிதமான விஷயம், அது கணவன் இறந்த பிறகுதான் அகற்றப்படும். எனவே, எதிர் மனுதாரர் அதை நீக்கியதை,அவரே ஒப்புக்கொண்டார். ஏனெனில் இது மனுதாரரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்டனர்.
மனுதாரரை 2011 முதல் பிரிந்து வாழும் மனைவி அவருடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு முயற்சி எடுத்ததற்கு ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், தாலியைக் கழட்டி கணவருக்கு மன வேதனையை அளித்ததாலும் இந்த விவகாரத்து வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து இந்த விவகாரத்தை வழங்குவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க:சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் - நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்