தீவிர சிகிச்சைப்பெறும் கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்து அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக சென்னை தாம்பரத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்தில் எஸ்பி சாந்தி தலைமையிலான காவல் துறையினர் நேற்று மாலை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக டாக்டர் முகமது இம்ரான்கானின் காரில் சோதனை நடத்தியதில், கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து, சிரஞ்சுகள் இருப்பது தெரியவந்தது .
அந்த மருந்துகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், முகமது இம்ரான் கானை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணிபுரியும் விக்னேஷ் ( 47 ) என்பவரிடம் இருந்து ரெம்டெசிவர் மருந்துகளை 17 ஆயிரம் கொடுத்து வாங்கி தேவைப்படும் நோயாளிகளுக்கு 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது .
இது குறித்து திருவண்ணாமலை குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காாவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது .
அதன்பேரில் , நேற்றிரவு 9 மணியளவில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணிபுரிந்து வந்த விக்னேஷை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.