ETV Bharat / city

TN Final Voter List Released: 2022-ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - சிறப்புச் சுருக்க முறை

TN Final Voter List Released: 2022ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்
author img

By

Published : Jan 6, 2022, 7:37 AM IST

சென்னை: TN Final Voter List Released: 2022ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் மொத்தம் 6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர் உள்ளனர்.

ஜனவரி 1, 2022 யை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 01.11.2021 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த 2021 ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நவம்பர் 30ஆம் தேதிவரை பெறப்பட்டன.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்

மேற்கண்ட சிறப்புச் சுருக்க முறை திருத்தக் காலத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,36,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 10,17,456 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,56,071 ; பெண்கள் 5,60,735 ; மூன்றாம் பாலினத்தவர் 650) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெயர் நீக்கலுக்காக 2,96,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2,86,174 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (80,018), இறப்பு (1,90,470) மற்றும் இரட்டைப் பதிவு (15,686) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.

பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 1,70,271 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 1,61,461 (ஆண்கள் 83,907 ; பெண்கள் 77,479 ; மூன்றாம் பாலினத்தவர் 75) ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2022ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இறுதி வாக்காளர் பட்டியல்

ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,23,348 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,20,338 (ஆண்கள் 56,421 ; பெண்கள் 63,899; மூன்றாம் பாலினத்தவர் 18) ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2022-ஆம் ஆண்டு சிறப்புச் சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழ்நாட்டில் 6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759; பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதிக வாக்காளர் கொண்ட தொகுதி

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட (சட்டமன்ற தொகுதி எண்:27) சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் (ஆண்கள் 3,56,239பேர்; பெண்கள் 3,55,394பேர்; மூன்றாம் பாலினத்தவர் 122பேர் ) மொத்தம் 7,11,755 வாக்காளர்கள் உள்ளனர்.

அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட (சட்டமன்ற தொகுதி எண்:117) கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் (ஆண்கள் 2,37,305பேர்; பெண்கள் 2,39,021பேர்; மூன்றாம் பாலினத்தவர் 141பேர்; என மொத்தம் 4,76,467பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் (ஆண்கள் 86,893பேர்; பெண்கள் 91,613பேர்; மூன்றாம் பாலினத்தவர் 11பேர்) மொத்த வாக்காளர்கள் 1,78,517 ஆவர்.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,665 ஆவர்.

புதிய வாக்காளர்கள்

2022ஆம் ஆண்டு சிறப்புச் சுருக்க முறை திருத்தத்தில் 18-19 வயதுள்ள (ஆண்கள் 2,29,338பேர்; பெண்கள் 2,03,125பேர்; மூன்றாம் பாலினத்தவர் 137பேர்) 4,32,600 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலுள்ள வாக்காளர்கள்

வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 8 பேரின் பெயர்களும் சிறப்புச் சுருக்க முறை திருத்தம், 2022-ம் காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

மாற்றுத் திறனாளி வாக்காளர்கள்

இதுவரை, 4,88,888 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க: 2 நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவை - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.