தமிழ்நாட்டில் இன்று (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினைச் செலுத்தி ஜனநாயகக் கடைமையை ஆற்றினர்.
அந்த வகையில், விஜய், சூரியா, கார்த்தி, விமல், அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது வாக்கினைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இருப்பினும் சில முக்கியப் பிரபலங்கள் வாக்களிக்கவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், நடிகர் அஜித்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், திரிஷா, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் வாக்களிக்கவில்லை.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு