'வலிமை' படம் வெளியீட்டு நாள் எப்போது? என்று தல ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'. நடிகர்கள் ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பட வெளியீடு
'வலிமை' படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பட வெளியீடு தாமதமானது.
இப்படம் குறித்து அப்டேட் கிடைக்காத ரசிகர்கள் யாரைப்பார்த்தாலும் அப்டேட் கேட்டுவந்தனர். இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை, அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதனைத்தொடர்ந்து இம்மாதம் 'நாங்க வேற மாறி' என்ற முதல் பாடலும் யுவன் இசையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தீபாவளிக்கு வலிமை..?
தீபாவளிக்கு படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதே நாளில் ரஜினியின் 'அண்ணாத்த' படமும் வெளியாகவுள்ளது. ஆனால், இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள், 'வலிமை' படத் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 'வலிமை' இவ்வருட இறுதியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று (ஆக. 16) சமூக வலைதளங்களில், இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக எண்ணி, #thaladiwali என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் 'வலிமை' படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்''