ETV Bharat / city

மரக்காணம் கலவரம்: பாமக தரப்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் அதிரடி - பாமக நிறுவனர் ராமதாஸ்

மரக்காணம் கலவரத்தில், பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக தரப்புக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மரக்காணம் கலவரம்
மரக்காணம் கலவரம்
author img

By

Published : Sep 27, 2021, 8:16 PM IST

சென்னை: மாமல்லபுரத்தில் 2013 ஏப்ரல் 25ஆம் தேதி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது.

அப்போது, மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. இது சம்பந்தமாக பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து 2013 ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் 2013 ஏப்ரல் 25 முதல் மே 19ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் விசாரித்தார்.

அப்போது, தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களைச் சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்தவித தடையும் இல்லை என நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு, இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால், அரசு நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

கலவரம் தொடர்பாக போக்குவரத்து துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால்தான், இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த நீதிபதி, கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் போராட்டங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இனிவரும் காலங்களில் பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து ஆட்சியர்களுக்கும், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.