ETV Bharat / city

தேர்தல் ஆணையம் தடை; ஆ.ராசா கோரிக்கை நிராகரிப்பு! - ஆ.ராசா

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

rasa
rasa
author img

By

Published : Apr 1, 2021, 3:40 PM IST

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, ஆ.ராசாவின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கக் கடிதம் அளிக்கப்பட்டது.

ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவர் 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது என தெரிவித்ததுடன், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும் ஆ.ராசாவை நீக்கி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது. ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் தற்போதைய நிலையில் பரப்புரைக்கு தடை விதித்துள்ளதாகவும், எனவே இவ்வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

ஆனால், நீதிபதிகள் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதையும் படிங்க: 'பழனிசாமி கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.