சென்னையில் நடக்கும் விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதில், வண்ணாரப்பேட்டை-விம்கோ மெட்ரோ ரயிலையும் தொடங்கி வைத்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை ரீனா ஆறுமுகம் என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3,770 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டம், 9.05 கி.மீ நீளம் கொண்டது. இதன்மூலம் வடசென்னை பகுதி மக்கள் விமான நிலையம் வரை எளிதாக வந்து செல்ல முடியும்.
8 உயர் மேம்பால ரயில் நிலையங்களும், 2 சுரங்க ரயில் நிலையங்களும் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...சென்னையில் பிரதமர் மோடி: செய்திகள் உடனுக்குடன்!