இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற படிப்புகளில், 278 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த மாணவர் நவீன் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு 394 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளதாகவும், 555 மாணவர்கள் விண்ணப்பித்த போதும், 116 பேருக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான காலியிடங்கள் இருந்ததால் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதைப் போல இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கும் தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிட வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நவம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்க: