ETV Bharat / city

ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறை - கோளாறுகளை சரி செய்ய உத்தரவு! - ஃபாஸ்டேக் கட்டணம்

சென்னை: சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

cash
cash
author img

By

Published : Jul 22, 2020, 12:35 PM IST

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி ’ஃபாஸ்டேக்’ (fastag) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெறாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணத்தை செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி சென்னை தி.நகரை சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அமர்வில் நடைபெற்றது. ஃபாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு திருப்பெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு குறுஞ்செய்தி மூலம் ஓடிபி எண்ணோ, ரகசிய குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை மத்திய அரசு சரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.