ETV Bharat / city

3 லட்சம் பேருக்கு மேல் கைது; 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் மூன்று லட்சம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் பேருக்கு மேல் கைது! 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

author img

By

Published : Apr 25, 2020, 10:34 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீறிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

3 லட்சம் பேருக்கு மேல் கைது! 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!
3 லட்சம் பேருக்கு மேல் கைது; 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்து 32 நாள்கள் ஆன நிலையில் தமிழ்நாடு காவல் துறை இதுவரை 2 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 882 பேரைக் காவல் துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

மேலும், இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக மூன்று கோடியே 13 லட்சத்து 98 ஆயிரத்து 554 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அபராத தொகை மூன்று கோடி ரூபாயை நெருங்கவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.