ETV Bharat / city

வேளச்சேரி வாக்குச்சாவடி 92இல் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு - election commision

மறுவாக்குப்பதிவு
மறுவாக்குப்பதிவு
author img

By

Published : Apr 13, 2021, 8:50 PM IST

Updated : Apr 13, 2021, 9:39 PM IST

20:46 April 13

வேளச்சேரி தொகுதியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் வாக்குச்சாவடி எண் 92இல் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி  தொகுதி வாக்குச்சாவடி எண் 92-ல் வாக்குப்பதிவு முடிந்ததும் , மூன்று ஊழியர்கள் சேர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவபேட் எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, வேளச்சேரி தொகுதியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாகவும் அவர் கூறினார்.  

இந்நிலையில், வேள்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92இல்  ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Apr 13, 2021, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.