ETV Bharat / city

''ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன்'' - திருமாவளவன் - ராவணன் தமிழ் சமூகத்தின் தலைவர்

சென்னை: ராவணன் தமிழ்ச் சமூகத்தின் தலைவன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன்
author img

By

Published : Nov 22, 2019, 8:50 AM IST

Updated : Nov 22, 2019, 9:12 PM IST

பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும்; அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

நாங்கள் ராவணனின் பிள்ளைகள்

அப்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை. அப்படி உருவாகவேயில்லை. இது பிற்காலத்தில் உருவானது. சைவம், வைணவம் என்றுதான் இருந்தன.

நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் ராமர் வைணவர். அப்படியென்றால் ராமரால் வதம் செய்யப்பட்ட ராவணன் சைவத்தைச் சார்ந்தவர். அந்த சைவத்தைச் சேர்ந்த ராவணன் எங்கள் தமிழன். இலங்கையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சமூகத்தின் தலைவன். சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர். அப்படியென்றால் நாங்கள் ராவணனின் வாரிசுகள்.

ராமாயணம் என்பதே ராமருக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை விவரிப்பது தான். அது வைணவத்துக்கும் சைவத்துக்கும் இடையே நடந்த யுத்தம் என்று இன்னொரு உருவகத்தை காட்டுகிறது. ராவணன் வீழ்த்தப்பட்டார் என்றால் சைவம் வீழ்த்தப்பட்டது. இதன்பிறகு சைவம், வைணவம் உள்ளிட்ட ஆறு, ஏழு மதங்கள் ஒன்று சேர்ந்து ஆதிசங்கரர் காலத்தில்தான் குறிப்பிட்ட அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கின்ற நிலை உருவானது.

அப்போது இந்துக்கள், வைதீகவாதிகள் என்று அழைக்கப்பட்டார்கள். பிராமணர்களுக்கு மட்டும்தான் இந்து என்கிற சொல் பொருந்தும். அவர்கள் சிந்து கரையில் வாழ்ந்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது. அவர்களைத்தான் சிந்துக்கள் அல்லது இந்துக்கள் என்று அழைத்தார்கள்.

இன்றைக்கு ஆண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும், நம் தமிழ்ச் சமூகமோ அல்லது மற்றவர்களோ யாரும் இந்துக்கள் இல்லை. வைணவர்களாக வாழ்ந்தார்கள் அவ்வது சைவர்களாக வாழ்ந்தார்கள். சைவத்துக்கும், வைணவத்துக்கும் யுத்தம் நடந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வரலாறும் உண்டு. அதனுடைய அடையாளமாக இருப்பதுதான் ராமாயணம் என்கிற காவியம்.

இதைக் குறிப்பிடுவதற்கு காரணம் இன்றைக்கு சனாதனத்தை எதிர்த்து நாம் போரிடுகிற வேளையில், இந்து மதத்துக்கு எதிராகப் பேசுவதாக எண்ணுகின்றனர். எல்லா கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள். இந்து சமூகத்தின் நம்பிக்கைக்கு எதிராக நாம் பேசவில்லை. ஆனால் நம்பிக்கை என்கிற பெயரால் சாஸ்திரம் என்கிற பெயரால் ஒரு அநீதி இங்கு இழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடுதான் ஜனநாயகத்துக்கு, முற்போக்கு சிந்தனைக்கு வழிகாட்டி. அயோத்தி தீ அயோத்தியில் பற்றவில்லை. அவர்கள் அலறக்கூடிய வகையில் சேப்பாக்கத்தில் அந்த தீ பற்ற வைக்கப்பட்டுள்ளது. அது நாடு முழுவதும் பரவி ஜனநாயகத்தைக் காப்பாற்றும் சனாதனத்தை சுட்டெரிக்கும்" என்றார்.

இதையும் படிங்க:

இன்று உதயமாகிறது ’தென்காசி’ புதிய மாவட்டம்

Intro:Body:பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயமற்றது என்றும் அதை மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு மற்றும் ஏராளமான இசுலாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், " ஒரு நீதியரசர் வீட்டிலிருந்து கிளம்பி செல்லும் வழியில் ஒரு கொலையை பார்க்கின்றார் என்றாலும் சட்டத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். சாட்சியங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் தான் நீதியரசர் தீர்ப்பு எழுத முடியும். ஏன் அந்த ஆதாரங்கள் தவறாக இருந்தாலும் அதன் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். இதுவே சட்டம்.

நாம் இஸ்லாமியர்கள் பக்கம் இல்லை. ஜனநாயகம், நீதி பக்கம் நிற்கின்றோம். இந்திய தொல்லியல் துறை ஆய்வின் படி அங்கு கட்டிடம் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கோவிலாக இல்லை என்று அவர்கள் சமர்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது இசுலாமிய கட்டிடமாகவும் இல்லை என்று சொல்கிறது. இந்த இடத்தில் சட்டப்படியான கேள்வி என்னவென்றால் கோவில் இருந்தததா இல்லையா என்பதுதான். ஏனென்றால் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகதான் வழக்கு. அங்கு கோவில் இல்லை என்று தொல்லியல் துறை அறிக்கைப்படி உச்சநீதிமன்ற ஒப்புக்கொள்கிறது.

அங்கு கோயில் இல்லை என்றால் அங்கு ராமர் கோயில் இல்லை. அங்கு ராமர் கோயில் இல்லை என்றால் அது இடிக்கப்படவில்லை. ராமர் கோயில் இடக்கப்படவில்லை என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வி வருகிறது. கோயில் இல்லை என்பதையும் பாபர் மசூதி இடிக்க்கப்பட்டது சட்டபவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது.

அதேபோல் அங்கோ ராமர் சிலை கொண்டுவந்து வைக்கப்பட்டது 1949 ஆம் ஆண்டுதான் என்றும் அதுவும் சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. இவை அனைத்தையும் குற்றம் என்று கூறிய உச்சநீதிமன்றம்தான் அந்த இடத்தை பாபர் மசூதி இடித்தவர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பும் வழங்குகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க வேண்டும் என்பது அல்ல நம்முடைய நோக்கம். ஆனால் இந்த தீர்ப்பு அநீதி என்பதை சுட்டிக்காட்டுவதற்கான தேவை இருக்கிறது. அவர்களே மரபை மீறியிருக்கின்றனர். சாட்சியங்களின் படி தீர்ப்பு அளிக்கப்படவில்லை. சாஸ்திரங்களின் படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டுவதற்காக தீர்ப்பு அளிக்கப்படவில்லை. அமைதியை நிலைநாட்டுவதற்காக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று சொன்னால் நாடு அமைதியாக இருக்கும். ஆனால் இந்துக்களுக்கு இல்லை என்று சொன்னால் நாடு அமைதியாக இருக்காது என்கிற கவலை அந்த ஐந்து நீதிபதிகளுக்கே இருந்திருக்கிறது.

இந்த தீர்ப்பை வெற்றியாகவும் கொண்டாட வேண்டாம் தோல்வியாகவும் எண்ண வேண்டாம் என்று மோடி சொல்கிறார். தோல்வி அவர் பக்கம் இருந்திருந்தால் இதே அறிக்கையை அவர் வெளியிட்டு இருப்பாரா.

இசுலாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று இன்னொன்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இசுலாமியர்கள் மாற்று இடத்தை கேட்டார்களா. இடிக்கப்பட்டதற்கு நீதி கேட்டார்கள். பாபர் மசூதியை கட்டித் தாருங்கள் என்றும் அவர்கள் கேட்கவில்லை.

ராமர் அங்கு பிறந்தார் என்று சாஸ்திரங்களின் அடிப்படடையில் நீதி வழங்கியிருக்கும் நீதாபதிகள் உள்ளபடியே அமைதியை விரும்பியிருந்தால் இந்த இடம் அரசுக்கு பொதுவாக இருக்கட்டும். ராமர் கோயில் கடௌடுதற்கு 5 ஏக்கர், பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் என்று வெளியே நிலம் பாருங்கள். இரண்டையும் மத்தியே அரசே கட்டித்தரும். இந்த இடம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்கலைக்கழகமோ அலல்து மருத்துவமனையோ கட்டலாம் என்று ஏன் தீர்ப்பு அளித்திருக்க கூடாது. ஏதோ ஒரு அரசியல் நெருக்கடி.

ஒரு வாரத்திற்கு முன்பே தலைவர்களும், ஊடகங்களும் தீர்ப்பு பற்றி விவாதித்க கூடாது என்று அமைதியாக்கி விட்டனர். ஊடகத்தை அச்சுறுத்தி வருகிறர்கள். இதைதான் பாசிசம் என்கிறோம். பாசிசத்துக்கும், சனாதனத்திற்கும் பொருள் தெரியாதவர்கள் இன்று நம்மீது பாய்ந்து பிராந்தி கொண்டிருக்கின்றனர்.

சனாதனம் என்றால் என்றும் மாறாதது என்பது பொருள். பாசிசம் என்றால் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது பொருள். அனைவருக்கும் சட்டப்படி நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகம். எனவே இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான ஆர்பப்பாட்டம் என்பதைவிட சனாதனத்துக்கு என்கிற பாசிசத்துத்க்கு எதிரான போராட்டம்.

சைவம், வைணவம் என்றுதான் இருந்தன. இந்து மதம் என்ற ஒன்று தோன்றவே இல்லை. அப்படி உருவாகவேயில்லை. இது பிற்காலத்தில் உருவானது.

நாங்கள் ராமனுக்கு எதிரனவர்கள் இல்லை. ஆனால் ராமன் வைணவர். அப்படியென்றால் ராமனால் வதம் செய்யப்பட்ட ராவணன் சைவ மதத்தை சார்ந்தவர். அந்த சைவ மத்ததை சார்ந்த ராவணன் எங்கள் தமிழன். இலங்கையை சார்ந்தவன். தமிழ் சமுகத்தின் தலைவன். சங்கம் வைத்து தமிழை வளர்த்தவன். அப்படியென்றால் நாங்கள் ராவணனின் வாரிசுகள்.

ராமாயணம் என்பதே ராமனுக்கும் ராவணனுன்கும் இடையில் நடந்த யுத்தத்தை விவரிப்பதுதான். அது வைணவத்துக்கும் சைவத்துக்கும் இடையே நடந்த யுத்தம் என்று இன்னொரு உருவகத்தை காட்டுகிறது. ராவணன் வீழ்த்தப்பட்டான் என்றான் சைவம் வீழ்த்தப்ட்டது. இதன்பிறகு சைவம், வைணவம் உள்ளிட்ட ஆறு, ஏழு மதங்கள் ஒன்று சேர்ந்து ஆதிசங்கரர் காலத்தில்தான் குறிப்பிட்ட அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கின்ற நிலை உருவானது.

அப்போது இந்துக்கள், வைதிகவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஒரே ஒரு சாதிதான். பிராமணர்களுக்கு மட்டும்தான் இந்து என்கிற சொல் பொருந்தும். அவர்கள் சிந்து கரையில் வாழ்ந்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது. அவர்களைதான் சிந்துக்கள் அல்லது இந்துக்கள் என்று அழைத்தார்கள்.

இன்றைக்கு ஆண்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம் தமிழ்ச் சமுகமோ அல்லது மற்றவர்களோ யாரும் இந்துக்கள் இல்லை. வைணவர்களாக வாழ்ந்தார்கள் அவ்வது சைவர்களாக வாழ்ந்தார்கள். சைவத்துக்கும் வைணவத்துக்கும் யுத்தம் நடந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. அதனுடைய அடையாளமாக இருப்பதுதான் ராமயணம் என்கிற காவியம்.

இதை குறிப்பிடுவதற்கு காரணம் இன்றைக்கு சனாதனத்தை எதிர்த்து நாம் போரிடுகிற வேளையில் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக எண்ணுகின்றனர். எல்லா கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள். இந்து சமுகத்தின் நம்பிக்கைக்கு எதிராக நாம் பேசவில்லை. ஆனால் நம்பிக்கை என்கிற பெயரால் சாஸ்திரம் என்கிற பெயரால் ஒரு அநீதி இங்கு இழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடுதான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி. ஜனநாயகத்துக்கு, முற்போக்கு சிந்தனைக்கு வழிகாட்டி. அயோத்தீ அயோத்தியில் பற்றவில்லை. அயோத்தீ என்று அவர்கள் அலரக்கூடிய வகையில் சேப்பாக்கத்தில் அந்த தீ பற்ற வைக்கப்பட்டுள்ளது. அது நாடு முழுவதும் பரவி ஜனநாயகத்தை காப்பாற்றும் சனாதனத்தை சுட்டெரிக்கும்" என்று கூறினார்.
Conclusion:
Last Updated : Nov 22, 2019, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.