சென்னை மாநகரில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், மேற்பார்வையில் துறையின் துணைக் கண்காணிப்பாளர் ஜான்சுந்தர், வழிகாட்டுதலின்படி ஆய்வாளர் முகேஷ் ராவ் தலைமையில் காவலர்கள் நேற்று (டிசம்பர் 1) சோதனையில் ஈடுபட்டனர்.
25 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
அதன்படி, ரெட்ஹில்ஸ் வடகரை எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள குடோனை தணிக்கை செய்தபோது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'AP - 26 - TD - 9844' என்ற எண்கொண்ட அசோக் 14 சக்கரங்கள் உடைய லேலேண்ட் டாரஸ் லாரியை காவலர்கள் சோதனை செய்தனர்.
இதில் பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேசன் அரிசி சுமார் 50 கிலோ எடை கொண்ட 500 மூட்டைகள் மொத்தம் சுமார் 25,000 கிலோ ரேசன் அரிசியை லோடு ஏற்றி கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
வெளிமாநிலத்திற்கு கடத்த திட்டம்
இதையடுத்து சண்முகம், சிவகுமார், ரூபேஷ்குமார், ராகுல், செனுஜன் ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் ரேசன் அரிசியை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையும் படிங்க: உங்கள் துறையில் முதலமைச்சர்: காவல் துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்