Rasakannu wife Parvathi Ammal: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், ராசாக்கண்ணு மனைவி பார்வதி ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய கே.பாலகிருஷ்ணன், 'மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்தோம். 'ஜெய் பீம்' திரைப்பட களப்போராளியான ராசாகண்ணுவின் மனைவி பார்வதியும், இந்தச் சந்திப்பில் உடனிருந்தார்.
பார்வதிக்குச் சொந்த ஊரில் வீடு கட்டிக் கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தோம். அலங்காநல்லூர், ஆம்பூர் சக்கரை ஆலைகளைத் திறக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத்தடுக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு
பழங்குடியின மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவான ஆய்வறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளோம்.
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், போக்சோ சட்டத்தை கடுமையாகப் பின்பற்றுவது குறித்து விரிவான பரிந்துரைகளை வழங்கி உள்ளோம். குடிசை மாற்று வாரிய தவணை முறையை அறிவித்தது உள்ளிட்டவைகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
வன உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் அமல் ஆகாமல் உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம்' எனத் தெரிவித்தார்.
இவர்களின் கோரிக்கையைப் பொறுமையாக கேட்டறிந்த முதலமைச்சர் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலி - கமல் ஹாசன்