ETV Bharat / city

3 மாதங்களில் பொருளாதார மேம்பாட்டு அறிக்கை - சி. ரங்கராஜன் குழு தகவல்!

சென்னை: ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு இன்னும் மூன்று மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

panel
panel
author img

By

Published : May 14, 2020, 4:25 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது நாள்களாக ஊரடங்கு நடைமுறையிலிருந்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்படைந்துள்ளனர். தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை.

தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், கரோனா அச்சம் காரணமாக எந்தப் பெரிய சிறிய நிறுவனங்களும் இயங்க முன்வரவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதனையடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் அரசு குழு ஒன்றை அமைத்தது. அக்குழு இன்று தனது முதல் கூட்டத்தை கூட்டி ஆலோசனையில் ஈடுபட்டது.

இதில், குழுவிற்கு உதவுவதற்காக ஐஏஎஸ் அலுவலர்களைக் கொண்ட துணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கராஜன், ”இது முதல் கூட்டம் என்பதால் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு உடனே செய்யவேண்டியவை, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு செய்ய வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார பாதிப்பு குறித்த அவரவர் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அரசின் வேண்டுகோளுக்கிணங்க இடைக்கால அறிக்கை அளிக்கப்படும். மூன்று மாதங்களில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

வெவ்வேறு துறைகளைப் பற்றி தனித்தனியாக ஆராய்வதற்காகப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களில் பொருளாதார வல்லுநர்களும், துறை சார்ந்த வல்லுநர்களும், அரசுத் துறைச் செயலர்களும் உள்ளனர்.

இக்குழுக்கள் மீண்டும் சந்திக்கும்போது முக்கிய அறிக்கையை அளிக்கும். அதனடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்“ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடிசை வாழ் மக்களுக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் - அமைச்சர் வேலுமணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.