சென்னை அம்பத்தூரில் இயங்கும் ராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில், 1976, 79களில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 55 வயதைக் கடந்த முன்னாள் மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உறவாடி மகிழ்ந்தனர்.
இதில் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முன்னாள் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்த மாணவர்கள், தங்களது அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். அதிலும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் பேச்சை வந்திருந்தவர்கள் வெகுவாக ரசித்தனர்.
அரசுப் பள்ளி வளாகத்தில் 520 மரக்கன்றுகளை நட்ட முன்னாள் மாணவர்கள்..!
காவல் ஆணையர் விஸ்வநாதன் பேசுகையில், ‘பள்ளிக்காலத்தில் 11 பள்ளிக்கூடங்களில் படித்தேன். அதில் அதிக பட்சம் இரண்டரை ஆண்டுகள் கல்வி கற்றது இந்த பள்ளிக்கூடம் தான். 8,9,10ஆகிய வகுப்புகள் இங்கு தான் படித்தேன். 1976ஆம் ஆண்டு நான் 8ஆவது சேரும்போது பிரேமாவதி ஆசிரியர் தான் எனக்கு கணக்கு எடுத்தார்.
'96' பட பாணியில் 50ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!
அவங்க எனக்கு ரொம்ப மெனக்கெட்டு கணக்கு எடுப்பாங்க. ஆனால், எனக்கு கடைசி வரைக்கும் கணக்கு வரவே இல்லை. அப்புறம் சுகுமாரன் ஐயா எனக்கு கூடுதல் பயிற்சி (டியூஷன்) கொடுத்தார். கடைசி வரைக்கும் அவங்களால எனக்கு கணக்கு சொல்லி கொடுக்க முடியலை. எனக்கும் வரலை... ஆனா எப்ப பார்த்தாலும் அன்பா பேசுவாங்க... பரவாயில்ல விடுடா... வருகிறது தான வரும்? என்று சொல்லி கற்றுக் கொடுக்க ரொம்ப முயற்சி பண்ணுவாங்க’ என்று தன் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
இறுதியில் அவர்கள் திட்டமிட்டபடி உணவை ஒன்றாக அருந்தி பின்னர், அந்த ஆண்டு பயின்ற நண்பர்கள் இணைந்து வாட்ஸ் ஆப் குழு ஒன்றை தொடங்கப் போவதாகவும் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.