இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் அரசுத் துறையில் 17 சோதனை மையங்கள், தனியார் துறையில் 23 மையங்கள் என மொத்தம் 40 மையங்கள் உள்ளன.
அவற்றில் நாளொன்றுக்கு 8,600 பேருக்கு சோதனைகள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக அரசுத் துறையில் 45, தனியார் துறையில் 34 என மொத்தம் 79 மையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன.
டெல்லியில் 6 நாள்களில் கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த முடியும்போது, சென்னையிலும் நிச்சயமாக உயர்த்த முடியும்.
அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். டெல்லியில் அவசரத் தேவைகளுக்காக தொடர்வண்டிப் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோன்ற யுக்திகளை பயன்படுத்தி இங்கும் படுக்கைகளின் எண்ணிக்கையை ஏற்கனவே அரசு தெரிவித்துள்ள 10,000 லிருந்து இன்னும் 10,000 படுக்கைகளை அதிகரிக்கலாம்.
என்ன செய்தாவது சென்னையில் கரோனா வைரஸ் (தீநுண்மி) சோதனைகளின் எண்ணிக்கையை அடுத்த சில நாள்களில் 20,000 ஆக உயர்த்த வேண்டும்.
சோதனைகளை அதிகரிப்பதற்குத் தேவையான கூடுதல் பிசிஆர் சோதனைக் கருவிகளை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்குவதுடன், நிதியுதவியையும் வழங்க வேண்டும்.
அத்துடன், சென்னையில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு விதிகளை, தெளிவான முன் அறிவிப்புடன் கடுமையாக்குவதற்கும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 'அரசின் பொறுப்பின்மையால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு' - மு.க. ஸ்டாலின்