ETV Bharat / city

’கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துங்கள்’ - அரசுகளுக்கு ராமதாஸ் கோரிக்கை - ராமதாஸ்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : Oct 6, 2020, 2:52 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த ஆண்டு தான் நடத்தப்பட்டன. அதிலும் கூட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், சென்னை தவிர்த்து 27 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்கள் மட்டும் தான் நடத்தப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட, அதற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்காததால் அங்கு எந்த வேலையும் நடக்கவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரிய அளவில் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்பதால், அவற்றுக்கான நிதித்தேவையில் 70 விழுக்காட்டை மத்திய அரசும், 30 விழுக்காட்டை மாநில அரசும் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மாதங்களில் எந்த அளவுக்கு நிதி கிடைத்திருக்க வேண்டுமோ? அதில் பத்தில் ஒரு பங்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதற்கான முயற்சியை கூட அரசுகள் மேற்கொள்ளவில்லை.

முந்தைய ஆட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், புதிய அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என கிராமங்களில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், அத்தேவைகள் இன்னும் பாதியளவு கூட நிறைவேற்றப்படாத நிலையில், சிறப்புத் திட்டங்கள் கைவிடப்பட்டதும் முறையல்ல. எனவே, சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து கிராமங்களில் புதிய மறுமலர்ச்சியை அரசு ஏற்படுத்த வேண்டும் " என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹத்ராஸ் நிகழ்வில் அநீதிக்குமேல் அநீதி - பழ.நெடுமாறன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.