சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தந்தையும், மகனும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், #சத்தியமாவிடவேக்கூடாது என்ற ஹேஷ்டாக்கையும் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை என்று தொடர்ச்சியாக பேசப்பட்டவந்த நிலையில், நீண்ட மௌனத்திற்குப்பிறகு ரஜினிகாந்த் தற்போது ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றப் பின்னணி கொண்ட தூத்துக்குடி காவல் ஆய்வாளர்: அம்பலமான பகீர் தகவல்!