ETV Bharat / city

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து - சென்னை மருத்துவமனை விபத்து

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் சர்ஜிக்கல் வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்திற்குள் 400 கேஸ் சிலிண்டர்கள் உள்ளன.

rajeev-gandhi-hospital-fire-breakout-in-chennai

author img

By

Published : Apr 27, 2022, 11:34 AM IST

Updated : Apr 27, 2022, 3:17 PM IST

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 2ஆவது டவர் பிளாக்கின் பின்புறம் உள்ள சர்ஜிக்கல் வார்டில் இன்று (ஏப். 27) காலை 11 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதால், நோயாளிகள் பதற்றமடைந்தனர்.

இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்குள் 400 கேஸ் சிலிண்டர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று வெடித்துவிட்டது. அந்த வார்ட்டில் இருக்கும் நோயாளிகளை போலீசார் மீட்டுவருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ராதகிருஷ்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏதும் பதிவாகவில்லை.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட தகவலில், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும், தீ விபத்தில் நோயாளிகள் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை பார்க்க ஸ்கைலிப்ட் இயந்திரம் வந்துள்ளது.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து!- அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Last Updated : Apr 27, 2022, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.