ETV Bharat / city

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - tamil nadu district news

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு
மழைக்கு வாய்ப்பு
author img

By

Published : May 15, 2022, 10:30 AM IST

சென்னை: அசானி புயலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது.

அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (மே.14) லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.