கரோனா தொற்றிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 35 ரயில்வே காவலர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரயில்வே ஐஜி பிரேந்திர குமார் பங்கேற்று, ரயில்வே காவலர்களுக்கு காசோலை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேந்திர குமார், ”சென்னையில் மட்டும் ரயில்வே துறையில் 128 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 110 பேர் குணமடைந்துள்ளனர். 38 பேர் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளனர். இன்று பணிக்கு திரும்பிய 35 பேரில் 10 பேர் பிளாஸ்மா சிகிச்சைக்கு தானம் அளித்துள்ளனர்.
கரோனாவால் ரயில்கள் இயங்காமல் நிற்பதால், ரயில் பெட்டிகளில் உள்ள உபகரணங்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. எனவே, கண்காணிப்பு பணியில் ரயில்வே காவலர்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், பயணிகள் தனிமனித இடைவெளியுடன் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன“ என்று கூறினார். இதில் ரயில்வே டிஐஜி அருள் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தேனாம்பேட்டையில் 14 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!