ETV Bharat / city

போனஸ் வழங்கு... போனஸ் வழங்கு! - தென்னக ரயில்வே

சென்னை: தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர் சென்னை கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Oct 19, 2020, 5:48 PM IST

தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க வேண்டும், தனியார் மயத்தைத் தடுக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்துப்படி, இரவுப்பணி படி, கூடுதல் பணி படி உள்ளிட்டவற்றை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னக ரயில்வே மஸ்தூர் சங்கத்தினர், சென்னை கோட்டம் முழுவதும் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் மழைக்கு இடையேயும், தொழிற்சங்கத்தினர் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர், போராடி பெற்ற உரிமைகள் பறிபோவதை ஏற்க முடியாது என்றும் தனியார் மயத்தால் ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் தெரிவித்தார். கரோனாவைக்காரணம்காட்டி ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசு, அதன் மூலம் பொதுமக்களின் சலுகைகளைப் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

போனஸ் வழங்கு! போனஸ் வழங்கு!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீதர், "43 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு இரவு நேரப்படி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. இது எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயல். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் போனஸ் குறித்து, மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. எனவே, போனஸ் குறித்து வரும் 21ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடாவிட்டால் 22ஆம் தேதி முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் போனஸ் தர மறுத்த ரயில்வே… ஆர்பாட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.