ETV Bharat / city

ரூட் தல பிரச்சனை: தீவிர பாதுகாப்பு - ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா - தீவிர பாதுகாப்பு

ரூட் தல பிரச்சனையை தடுக்க கல்லூரி மாணவர்கள் அதிகமாக செல்லும் ரயில் ரூட்டை கண்டறிந்து, அங்கு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.

ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா பேட்டி
ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா பேட்டி
author img

By

Published : Jul 1, 2022, 6:13 PM IST

சென்னை: ரயில் நிலையங்களில் பிடிக்கப்பட்ட கஞ்சா மற்றும் காணாமல் போன, திருடுபோன பொருள்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தது குறித்தான செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜுலை. 1) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா ஐ.பி.எஸ், ரயில்வே டி.ஐ.ஜி அபிஷேக் தீக்‌ஷித் ஐ.பி.எஸ், ஆர்.பி.எஃப் கமிஷ்னர் செந்தில் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே கூடுதல் டி.ஜி.பி வனிதா ஐ.பி.எஸ், கஞ்சா வேட்டை 2.0 தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த சில நாள்களாக ஜி.ஆர்.பி மற்றும் ஆர்.பி.எஃப் இணைந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 780 கிலோ கஞ்சா பிடித்துள்ளதாகவும், மேலும் இதுவரை 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 01.01.2022 முதல் 30.06.2022 வரை சென்னை மற்றும் திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்டங்களில் களவுபோன ரூ.6,38,100 மதிப்புள்ள 82 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 01.01.2022 முதல் 30.06.2022 வரை சென்னை மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்டங்களில் களவுபோன ரூ.5,97,420 மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா பேட்டி

அதேபோல கடந்த 6 மாதங்களில் சென்னை மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்டங்களில் களவுபோன பணம் ரூ.1,72,880 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.

சென்னை மற்றும் திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் பெற்றோர் இல்லாமல் தனியாக சுற்றித்திரிந்த 1,119 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1,064 சிறார்கள் காப்பகங்களிலும், 55 சிறார்கள் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் வெளிமாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டு ரயில் மூலமாக தப்பி செல்வதால் உடனடியாக அவர்களை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேக மரண வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். ரூட் தல பிரச்சனைகளை தடுக்க கல்லூரி மாணவர்கள் அதிகமாக செல்லும் ரயில் ரூட்டுகளை கண்டறிந்து அங்கு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வட மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம், விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா மார்கமாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து விரைவு ரயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவை கடத்தப்படுகிறதா என தனிப்படையினர் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி கல்யாணராமனுக்கு எதிராக வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.