ETV Bharat / city

'அன்பழகனின் மறைவுச் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தேன்' - ராகுல் காந்தி

டெல்லி: பேராசிரியர் க. அன்பழகனின் மறைவுச் செய்தியை அறிந்து ஆழ்ந்த துயரமடைந்ததாக ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi expressed his condolences over the demise of DMK General Secretary K Anbalagan

author img

By

Published : Mar 7, 2020, 8:25 PM IST

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் வயநாடு மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இரங்கல் கடிதத்தை அன்பழகனின் மகன் அன்புச்செல்வனுக்கு ராகுல் காந்தி டெல்லியிலிருந்து அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:

’உங்கள் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து நான் ஆழ்ந்த துயருற்றேன். உங்கள் தந்தையின் இழப்பால் நீங்கள் படும் துயரமும் அதனால் ஏற்பட்ட வலியையும் என்னால் உணர முடிகிறது. இந்தத் தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான இச்சமயத்தில் எனது சிந்தனைகளும் பிரார்த்தனையும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்காகவும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என வருந்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: 'செய்தித்தாள் விற்றவரின் செல்ல மகன் வரலாறு; செத்தாலும் வற்றாது 'அன்பழகன்' புகழாறு'

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.