சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, 'சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2022-2023 தாக்கல் செய்யும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு எப்போது நிதிநிலைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்தான தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சில பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எத்தனைப் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உள்ளிட்ட விவரம் அறிவிப்பில் இடம் பெறும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் - மத்திய அரசு